Saturday 13 July 2013

பணம் ஓரு பிரச்சனை அல்ல...

 OSHO WORDS....

பணம் ஓரு பிரச்சனை அல்ல! அதனை உபயோகபடுத்தலாம்.

உன்னிடம் அது இருந்தால் உபயோகப்படுத்து ; உன்னிடம் பணம் இல்லாவிட்டால், பணம் இல்லாதபோது உனக்கு இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்து. இதுதான் என்னுடைய வழிமுறை. நீ பணக்காரனாக இருந்தால் ஆனந்தமாக அனுபவி. ஏழை மனிதன் அனுபவிக்கமுடியாத சில இன்பங்களை செல்வம் கொண்டுள்ளது. நான் செல்வத்தோடும் இருந்திருக்கிறேன், ஏழையாகவும் இருந்திருக்கிறேன், நான் உண்மையாக கூறுகிறேன், பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய ஓரு சில விஷயங்கள் இருக்கின்றன. உன்னிடம் செல்வம் இருக்கும்பொழுது ஆனந்தமாக அனுபவி. நான் திரும்பவும் உன்னிடம் கூறுகிறேன், நான் செல்வத்தோடும் இருந்திருக்கிறேன், ஏழையாகவும் இருந்திருக்கிறேன், ஏழை மக்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய விஷயங்கள் சில இருக்கின்றன. இரண்டையும் ஓரே சமயத்தில் அனுபவிக்கமுடியாது.

எனவே எப்போதானாலும், நடப்பது என்னவாக இருந்தாலும், ஆனந்தமாக அனுபவி. ஏழை மனிதன் ஓரு வகையான சுதந்திரத்தைக் கொண்டுள்ளான். வறுமை ஓரு வகையான தூய்மையை, ஓரு ஓய்வுதன்மையை, திருப்தியான தன்மையை கொண்டுள்ளது. மனம் மிகவும் கவலைபடுவதில்லை. கவலைபட ஏதுமில்லை, நீ நிம்மதியாக உறங்கலாம். ஏழை மனிதனுக்கு தூக்கமின்மை இயலாதது. எனவே குறட்டை விட்டு நன்றாக தூங்கு. ஏழ்மையிலிருந்து வரும் சுதந்திரத்தை ஆனந்தமாக அனுபவி.

சில சமயங்களில் நீ செல்வந்தனாக இருந்தால், செல்வத்தை அனுபவி, ஏனெனில் பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய சில விஷயங்கள் இருக்கின்றன. சிறந்த ஓவியங்களை உனது சுவற்றில் நீ மாட்டலாம். ஏழை அவ்வாறு செய்ய இயலாது. உனது வீட்டில் நீ சிறந்த இசையை வைத்திருக்கலாம். ஏழை அவ்வாறு செய்ய இயலாது. உன்னுடைய வீட்டை சுற்றி நீ ஜென் தோட்டம் அமைக்கலாம், ஏழை அவ்வாறு செய்ய இயலாது. நீ கவிதை படிக்கலாம், நீ வரையலாம், நீ கிதார் வாசிக்கலாம், நீ ஆடலாம், பாடலாம், தியானம் செய்யலாம் ஆயிரக்கணக்கான விஷயங்கள் கிடைக்கின்றன.

என்னுடைய வழி: எது எப்படியிருந்தாலும், நீ அதன் மூலம் என்ன செய்யமுடியும் என்று பார். அது வறுமையாக இருக்குமானால் புத்தராக ஆகிவிடு. ஊர் சுற்றத் தெரடங்கு, ஓரு பிச்சை பாத்திரத்தை எடுத்து கொள். பிச்சைக்காரருக்கு மட்டுமே இருக்ககூடிய அந்த அழகை அனுபவி. அவர் எந்த இடத்தையும் சேர்ந்தவரல்ல, இன்று இங்கே இருக்கிறார், நாளை அவர் போய்விடுவார். அவர் ஓரு ஓட்டம். அவருக்கு எந்த வீடும் இல்லை. மழை வரபோகிறது கூரையை சரிசெய்யவேண்டும் என்ற கவலை அவருக்கு இல்லை. யாராவது எதையாவது திருடிவிடுவார்களோ என்னும் பயம் அவருக்கு இல்லை. அவரிடம் எதுவும் இல்லை.

வறுமையாக இருக்கும்பொழுது வறுமையை ஆனந்தமாக அனுபவி. செல்வம் இருக்கும்பொழுது ஜனகராக ஆகிவிடு, அரசனாக ஆகிவிடு, பணத்தினால் கிடைக்கும் அனைத்து அழகுகளையும் அனுபவி.

என்னுடைய வழி முழுமையானது. நான் உனக்கு தேர்ந்தெடுக்க கற்றுத் தரவில்லை, நான் வெறுமனே ஓரு புத்திசாலியான மனிதன் எது எப்படியிருந்தாலும் அதனை அழகாக்கிவிடுவான் என கூறுகிறேன். புத்தியில்லாத மனிதன் சிரமப்படுகிறான். அவனிடம் பணமிருந்தால் அவன் சிரமப்படுகிறான் ஏனெனில் பணம் கவலைகளை கொண்டுவருகிறது. அவன் பணம் கொண்டுவரக்கூடிய இசையை, நடனத்தை, ஓவியத்தை இரசிப்பதில்லை. அவனிடம் பணம் இருந்தால் அவன் ஓய்வெடுக்க, தியானம் செய்ய, பள்ளதாக்குகளில் கத்திப் பாட, மற்றும் நட்சத்திரங்களோடு பேச அவன் செல்வதில்லை, அவன் கவலைபடுகிறான், தனது உறக்கத்தை இழந்துவிடுகிறான், பசியை இழந்துவிடுகிறான். பணம் இருக்கும்பொழுது அவன் தவறானதை தேர்ந்தெடுக்கிறான். இந்த மனிதன் எப்படியோ ஏழையானால், கடவுளின் அருளால் ஏழையானால், பிறகு அவன் ஏழ்மையில் சிரமப்படுகிறான், பிறகு அவன் தொடர்ந்து “அது இல்லை, இது இல்லை” எனக் கவலைப்படுகிறான். உன்னிடம் வறுமை உள்ளது!

அதனை ஆனந்தமாக அனுபவி!-----osho

No comments:

Post a Comment