Wednesday 10 July 2013

படித்ததில் பிடித்தது ...எத்தனை மனம் ..

மனம் எத்தனை மனமடி !

மனம்.

என் மனதில் நீ இருக்கிறாய்.உன் மனதில் நான் இருக்கிறேன்.

நீ என் மனதை காயப்படுத்தி விட்டாய்.

என் மனதிற்கு பிடித்துருக்கிறது; பிடிக்கவில்லை.

இப்படி மனதையொட்டி பல கருத்துகளை நாம் பார்க்கிறோம்.

மனம் என்றால் என்ன?

நீங்கள் இருக்கிறீர்கள்.
உங்களை பற்றி ஒரு கருத்து உங்களிடம் இருக்கும்.
உங்களை சுற்றி உள்ளவர்களைப் பற்றி ஒரு கருத்து உங்களிடம் இருக்கும்.
உங்கள் நம்பிக்கை; அவநம்பிக்கை, பிடித்தது; பிடிக்காதது..
படித்தது; அனுபவித்தது..
இப்படி எல்லாமே உங்களை சுற்றி ஒரு 'புகை' மண்டலத்தை ஏற்படுத்தி வைத்திருக்கும்.

இதுதான் மனம். மனம் நம்முள் இருக்கிறது என்ற கருத்துக்கு பதில் நாம் மனதினுள் இருக்கிறோம் என்ற கருத்து சிந்திக்கத்தக்கது.

அதை இப்படி கற்பனை பண்ணிக் கொள்வோம்.

நாம் நடுவில் இருக்கிறோம். நம் மனம் நம்மை சுற்றி உள்ளது. இதுதான் நாம்.


இதுதான்
நம் உலகம். நாம் படித்த மற்ற உலகங்களை மறந்து விடுவோம். அவை அனுபவப் படாது.

அடுத்து இது உங்கள் நண்பர். அவருக்கும் தனி மனம் உண்டு. இதுதான் அவர் உலகம்.

நீங்கள் இருவரும் பழகும் பொது , உங்கள் இருவரின் மனமும் ஒரு பகுதியாக இணையும்.

எவ்வளவு பகுதி இணைகிறதோ, அவ்வளவு நட்பாக இருப்பீர்கள்.

எவ்வளவுதான் இணைந்தாலும், உங்களின் பெரும்பகுதி தனியாகத்தான்; தனித்தன்மையுடன் இருக்கும்.

உங்களுக்கு A பிடிக்கும். C பிடிக்கும்.
உங்கள் நண்பருக்கு B பிடிக்கும். C பிடிக்கும்.
என்று வைத்துக்கொள்வோம்.

மனதில் அது இவ்வாறு வேலை செய்யும்.


நீங்கள் ஒரு மனம். உங்கள் நண்பர் ஒரு மனம். இப்போது புதிதாக, உங்கள் இருவருக்கும் ஒரு தற்காலிக மனம். இந்த தற்காலிக மனத்திற்கு உங்கள் இருவரின் மனமும் பங்கு தருகின்றன.

நாம் பலரிடம் பேசுகிறோம்; பழகுகிறோம்; அன்பு செலுத்துகிறோம்.

அவ்வகையில் நம் மனதை சுற்றி பிறரின் மனங்கள் சிக்கி பிணைந்துள்ளன.

இருவர் இணைந்தால், புதிதாக ஒரு மனம் தோன்றி மொத்தம் அங்கு மூன்று மனமாகிறது.

மூவர் இணைந்தால், புதிதாக 7 மனங்கள் தோன்றி மொத்தம் பத்து மனமாகிறது.

நால்வர் இணைந்தால், புதிதாக 13 மனங்கள் தோன்றி மொத்தம் 17 மனமாகிறது.

இப்படியே ஒரு பெரிய கூட்டம் சேர்ந்து, எண்ணிக்கையிலடங்கா மனதை உருவாக்குகின்றன. அதன் உச்சத்தில் ஒரு சமுதாயத்தின் மனதை உருவாக்குகின்றன.

இவ்வாறே ஒவ்வொரு இனத்துக்கும் தனித்தனியே அவ்வினத்திற்க்கான மனம் செயல்படுகிறது.

பிறகு அது வளர்ந்து மொத்த மனித குலத்தின் மனமாகிறது.

அது மென்மேலும் பெருகி அதன் மிக உச்ச நிலையில் பிரபஞ்ச மனதை தோற்றுவிக்கிறது என்று நான் கருதுகிறேன்.

நீங்கள் ஓர் ஆசிரியர் என்று வைத்துக்கொள்வோம்.

உங்கள் மாணவர் எழுதிய கட்டுரைக்கு நீங்கள் புள்ளிகள் அளிக்கிறிர்கள்.
39 புள்ளிகள் எடுத்தால், இன்னுமொரு புள்ளி கொடுத்து அம்மாணவனை 'பாஸ்' ஆக்கவும் முடியும்; அந்த ஒரு புள்ளி கொடுக்காமல் அம்மாணவனை 'பெயில்' ஆக்கவும் முடியும். முடிவு உங்கள் கையில். இங்கு உங்கள் மனம் மட்டுமே முடிவெடுக்கும். அதற்கு அந்த அதிகாரம் உண்டு. அம்மாணவன் உங்களிடம் பணிந்து கேட்டுக்கொண்டால், நீங்களும் அப்புள்ளியை கொடுக்க வாய்ப்புண்டு.


அடுத்து, ஒரு கார் வாங்கப் போகிறிர்கள். உங்கள் மனம் மட்டும் முடிவெடுக்க முடியாது. உங்கள் துணையும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும்.

உண்மையில் யார் முடிவெடுக்கிறார்கள்?

மேலே கொடுக்கப்பட்ட உதாரணத்தில் C உங்களது தற்காலிக புதிய மனம். இதுதான் முடிவெடுக்கும்.

C என்ன பண்ணும்? அது A-வான உங்கள் வருமானத்தையும், B-யான உங்கள் துணையின் வருமானத்தையும் வைத்து ஒரு கணக்கு போட்டு முடிவெடுக்கும்.

ஆனால், பார்ப்பதற்கு, C-யின் செயல்பாடு தெரியாது. நாம் சொல்வோம். நானும் என் துணையும் சேந்துதான் முடிவெடுத்தோம் என்று! இங்கு அதிகாரம் C-யின் கையில் உள்ளது.

அதே போல்தான், ஒரு நிறுவனத்தின் மனம்; ஒரு சமுதாயத்தின் மனம்; ஒரு இனத்தின் மனம் என்று வளர்ந்து பிரபஞ்ச மனம்வரை செல்கிறது.

நம் சக்திக்கு மீறிய செயல் நடைபெற வேண்டுமானால், நம் கோரிக்கையை பிரபஞ்ச மனதிடம் வைக்க வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு.

கொடுக்க வேண்டும் என்றால், அது கொடுக்கும்; முடியாது என்றால் அது கொடுக்காது.

இந்த பிரபஞ்ச மனதின் செயல்பாடுகளை மக்கள் புரிந்துக் கொள்ளாமல், கடவுளிடம் வேண்டுங்கள். கிடைக்கும் என்றார்கள்.

ஆரோக்கியம் வேண்டுமா?
குழந்தை வேண்டுமா?
கார் வேண்டுமா?
வீடு வேண்டுமா?
நல்ல கணவன் வேண்டுமா?
நல்ல மனைவி வேண்டுமா?

இப்படி எது வேண்டுமானாலும் கடவுளிடம் வேண்டுங்கள்;
சாமியிடம் வேண்டுங்கள் என்பார்கள்.

உங்களுக்கு கிடைக்கும் என்றால் நிச்சயம் கிடைக்கும்.
கிடைக்காது என்றால் நிச்சயம் கிடைக்காது.

இப்படி நம் தேவைகளை கொடுக்கும் பணியை பிரபஞ்ச மனம் செய்கிறது என்று நான் கருதுகிறேன்.
கடவுளுக்கும் இதற்கும் தொடர்பில்லை.

நாம் கேட்பது எதனையும் கடவுள் கொடுக்கப் போவதில்லை.
அது அவர் வேலையில்லை.

புராணங்களில் பக்தர்களின்; அடியவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து அதிசயங்கள் நிகழ்ந்தனவே, அவை அனைத்தும் கடவுளின் வேலையில்லை.

மனம்தான் தன அனுபவத்துக்கேற்ப அறிவோடு அல்லது முட்டாளாக இருக்கிறது.

மொத்த அனுபவத்தின் உச்சமாக பிரபஞ்ச மனம் பேரறிவோடு இருக்கிறது.

அறிவு என்ற வார்த்தை கடவுளுக்குப் பொருத்தமில்லை.

அறிவு அனுபவத்தை கொடுக்கிறது. கடவுள் அனுபவத்தை கடந்து நிற்பது. அவ்வகையில், கடவுளுக்கு அறிவு என்பது இல்லை. நக்கலாக சொல்வேதேன்றால், கடவுள் என்பது அறிவற்ற முட்டாள்.

ஆனால் கடவுள்தான் எல்லாமே! அதனால்தான் அறிவைக் கொண்டு கடவுளை அணுக முடியாது என்று ஞானிகள் சொன்னார்களோ!

அறிவுள்ள பிரபஞ்ச மனம் (அதாவது மக்களின் கண்களுக்கு கடவுள்) பிறப்பு இறப்பிற்கு கட்டுப்பட்டது. அது நிலையில்லை.

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் நிலையானவர்கள் அல்ல; அவர்களுக்கும் 'பிறப்பு', 'இறப்பு' உண்டு; சிவன் என்பது ஒருமையல்ல, அது பன்மை; ஒரு சிவன் காலம் முடிந்தவுடன் அடுத்த சிவன் வருவார்; அதே போல்தான் மற்ற மூர்த்திகளும், என்று கூறப்படுவதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

No comments:

Post a Comment