Thursday 7 April 2016

தியானத்திற்கு தடை மனமே - OSHO

  
நீங்கள் கண்களை மூடி தியானம்
செய்ய ஆரம்பத்தீர்கள் என்றால்
சிறிது நேரத்தில் சோர்வு வரும் , சலிப்பு வரும் ,
உடனே கண்ணை திறக்க வேண்டும் என்கிற ஆர்வம்
வரும் . உங்களால் சிறுது நேரம் கூட கண்ணை மூடி
உட்கார முடியாது .. காரணம் என்ன ,
நீங்கள் தியானம் செய்ய ஆரம்பிக்கும் கணம்
மனம் மரிக்கும் கணம் ஆரம்பமாகி விடுகிறது .
தான் மரிக்காமல் இருக்க அது பல வித்தைகளை ,
பல காரணங்களை எழுப்பி உங்களை தியானம்
செய்ய விடாது .. நீங்களும் தியானம் செய்ய முடியவில்லை ,
தியானத்தில் உட்கார்ந்தால் தான் சோர்வு , சலிப்பு ,
வருகிறது என்று நினைத்து எழுந்து விடுவீர்கள் ..
இவையெல்லாம் மனம் தான் மரிக்காமல் இருக்க
செய்யும் அதன் தந்திரம்
இந்த மனதின் தந்திரத்திலேயே பலர் வீழ்ந்து விடுகின்றனர் .
இதிலேயே தான்
பெரும்பாலனோர் தியானம் அமைகிறது.
இந்த நிலையில் நான் தினமும் தியானம் செய்தும்
எனக்கு நிம்மதி , மகிழ்ச்சி இல்லை என்று நினைக்கின்றனர்.
இந்த மனதை தாண்டாமல் நீங்கள் என்ன செய்தாலும் அது
தியானமே ஆகாது .
மனம் செய்யும் வித்தைகளை எல்லாம்
நீங்கள் வெறுமனே கவனித்துக் கொண்டே இருந்தால்
மனம் அடங்கி விடும் .. உங்களுக்கு ஒரு நல்ல சேவகனாக
மனம் மாறிவிடும் . .. இப்போது மனம் மூலம் செயல்படும்
தியானத்திற்கு பிறகு நீங்கள்
மனதை ஒரு கருவியாக செயல்படுத்துவீர்கள் .
அப்போது உங்களுக்குள் இது நாள் வரை இருந்த துயரம்,
துக்கம், மன அழுத்தம் , போர் தன்மை , சலிப்பு
எல்லாம் ஆவியாக மறைந்து விடும்.
கொண்டாட்டம்,ஆனந்தம் என்கிற வார்த்தையின்
உண்மையான பொருள் அப்போது புரிய வரும் .
நீங்கள் தியானம் செய்பவராக இருந்தால் நீங்கள்
எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் ,
உங்களுக்கு வாழ்வே மகிழ்ச்சிகரமாக , ஆனந்தகரமாக
கொண்டாட்டமாக இருக்கும்

மனம் மனம்

இன்று உலகம் எதிர்நோக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இந்த மனம் தான் காரணம் என்றால் மிகையல்ல.
ஏனனில் மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பு.
சிறைக்கூடம். இதில் புதிய எண்ணங்கள் மட்டும் கைதிகளல்ல. பழம் பெரும் கைதிகளும் இருக்கின்றன.
சிலர் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். சிலர் தேவையானபோது மட்டும் வெளிவருவர்.
சிலர் வெளிவரும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். நம் மனதில் இவ்வளவு காலமும் இது இருந்ததா என. இந்த மனதிலிருந்தே உலகத்தில் உள்ள எழுத்துக்கள் சொற்கள் அதிலிருந்து வசனங்களும்
எண்ணங்களும் சிந்தனைகளும் பிறந்தன.
இவற்றின் பிறப்பில் ஒரு தவறும் இல்லை. இவை நம்மை வழிநடத்த நாம் எருமை மாடுகள் போல் tongue emoticon
இயந்திரமாக இதன் பின் இயங்கிக்கொண்டிருப்பது தான் தவறு.
நமது பிரக்ஞையின் கட்டுப்பாட்டில் நம் மனம் இருக்கவேண்டும்நம் மனதை முதலாளி பதிவியிலிருந்து கீழ் இறக்கி நம் வேலையாளாக மாற்றிவிடுவோமானால்நம் பிரச்சனைகளில் தொன்னூறுவீதம் (90 %) இல்லாமல் போய்விடும்
. ஏனனில் நமக்காகவே மனம் செயற்படவேண்டும்.
மனதிற்காக நாம் வாழவில்லை.மனதை சரியான வழியில் பயன்படுத்தக்கூடியவழிநடத்தக்கூ
டிய ஒரே சக்தி.
நம் பிரக்ஞை மட்டுமே
--- ஓஷோ ---

Friday 1 April 2016

மனதை ரசியுங்கள்-OSHO


மனதை நிறுத்த முயலாதீர்கள்.
அது உங்களுடைய இயற்கையான ஒருபகுதி; அதை நிறுத்த முயன்றால் நீங்கள் கிறுக்கனாகிவிடுவீர்கள்.
அது ஒருமரம் தன்இலைகளை தடுப்பதைப்போல;
மரம் பைத்தியமாகிவிடும். இலை என்பது அதற்கு இயற்கையானது.
அதனால் முதல்விஷயம்:
யோசிப்பதை நிறுத்த முயலாதீர்கள், அது உண்மையில் நல்லது.
இரண்டாவது விஷயம்: தடுக்காமல் இருப்பது மட்டும் போதாது, இரண்டாவது
அதை ரசிக்க வேண்டும். அதனுடன் விளையாடுங்கள்! அது ஒரு அழகான விளையாட்டு! அதனுடன் விளையாடுங்கள்,
அதை ரசியுங்கள், அதை வரவேற்றுக் கொள்ளுங்கள், நீங்கள்  அதை பற்றி கவனமாக இருப்பீர்கள். அதிக விழிப்புணர்வோடு.
ஆனால் அந்த விழிப்புணர்வு என்பது மிக,
மிக, மறைமுகமாக வரும். , விழிப்புவேண்டும் என்கிற முயற்சியாக இருக்காது.  நீங்கள் விழிப்போடு இருக்க முயலும்போது, மனம் உங்களை திசை திருப்புகிறது, அதன்மீது உங்களுக்கு கோபம் வருகிறது. அரட்டையடித்துக் கொண்டேயிருக்கிற ஒரு அசிங்கமான மனம் என்கிற எண்ணம் ஏற்படும். நீங்கள்
மெளனமாக இருக்க நினைக்கிறீர்கள், அது உங்களை அனுமதிப்பதில்லை. அதனால் மனதை ஒரு எதிரியாக கருதத் துவங்குகிறீர்கள்.
அதுநல்லதல்ல; அது உங்களையே இரண்டாகப் பிரிப்பது.  பிறகு நீங்களும்,
உங்கள் மனமும் இரண்டாகிறீர்கள்., மோதல், உரசல் துவங்குகிறது. எல்லா உரசல்களுமே தற்கொலையானது காரணம் உங்கள் சக்திதான் தேவையில்லாமல்
விரயமாகிறது. நமக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்ளும் அளவுக்கு நமக்கு பலம் இல்லை. அதே சக்தியை சந்தோஷத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
அதனால் யோசிக்கிற நிகழ்வை ரசிக்கத் துவங்குங்கள். எண்ணங்களில் நயநுட்பங்களை கவனியுங்கள், அது எத்தனை திருப்பத்தை ஏற்படுத்துகிறது.
ஒன்று எப்படி மற்றொன்றுக்கு கொண்டு செல்கிறது., அவை எப்படி ஒன்றுக்கொன்று கோர்த்துக் கொள்கிறது.  அதை கவனிப்பதே
ஒரு அற்புதம் ஒரு சின்ன யோசனை உங்களை எங்கேயோ ஒருகோடி எல்லைக்கு கொண்டுசெல்லும் அதை கவனித்தால் அவைகளுக்குள் எந்தத்தொடர்பும் இருக்காது.
அதை ரசியுங்கள் – அது ஒரு விளையாட்டாக இருக்கட்டும்.
வேண்டுமென்றே விளையாடுங்கள் உங்களுக்கே வியப்பாக இருக்கும்;
சிலசமயங்களில் அதை ரசிக்கத் துவங்குங்கள்.
அழகான இடைநிறுத்தங்களை காண்பீர்கள்.  திடீரென்று
ஒருநாய் குரைக்கும், ஆனால் உங்கள் மனதில் எதுவுமே எழாததை காண்பீர்கள், யோசனை சங்கலி துவங்கியிருக்காது. நாய் குரைத்துக் கொண்டேயிருக்கும், நீங்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் எந்த சிந்தனையும் எழாது.  சின்ன இடைவெளிகள் தோன்றும்… ஆனால் அவைகளை
நிரப்ப வேண்டியதில்லை. அவை தானாகவே வருகிறது, அவை வரும்போது, அவை அழகாக இருக்கின்றன.  இந்த சின்ன இடைவெளிகளில் நீங்கள் கவனிப்பவரை கவனிக்கிறீர்கள்.  – ஆனால் அது இயற்கையாகவே நடக்கும்.
மறுபடியும் சிந்தனைகள் வரும் நீங்கள் அதை ரசிப்பீர்கள்.  சுலபமாக
செல்லுங்கள், அதை சுலபமாக எடுத்துக் கொள்ளுங்கள்.  ஒரு விழிப்புணர்வு
உங்களுக்குள் வரும். ஆனால் அவை மறைமுகமாக வரும்.
கவனிப்பது, ரசிப்பது, சிந்தனைகளில் ஒரு திருப்பம் ஏற்படுத்துவதை பார்ப்பது,
லட்சக்கணக்கான அலைகளோடு இருக்கும் கடலை கவனிப்பதைப்போல இருக்கும்.  இதுவும்கூட ஒருகடல்தான், எண்ணங்கள்தான்
அலைகள். ஆனால் மக்கள் போய் கடலில் இருக்கும் அலைகளை ரசிக்கிறார்கள்.  ஆனால் தங்கள் உள்ளுணர்வில் ஏற்படும் அலைகளை ரசிப்பதில்லை