உனக்குள் மலர்கள் விரிந்து மணம்
பரப்புவதை பார்த்த நாளில் இருந்துதான் ஆன்மீகம் என்ற ஒன்று இருப்பதை நீ
அறிந்துகொள்கிறாய். மேலும் அது ஒரு இலக்கு அல்ல. மரங்கள் எந்த இலக்கை
நோக்கியும் வளர்வதில்லை. மலர்ந்து மணம் பரப்புவதன் மூலம் இயற்கையோடு
முழுமையாக கரைந்து கலந்து விடக் கூடிய அவற்றின் உள்ளே உள்ளார்ந்து மறைந்து
உள்ள சக்தியை வெளிக் கொண்டு வரவே அவை வளர்கின்றன. பிரபஞ்சத்திற்கு எந்த
இலக்கும் இல்லை. அது வெறுமனே மலர்ந்து மணம் பரப்புகிறது.
நீ உனது பொறுப்பை புரிந்து கொண்ட வினாடியில் நீ மலர ஆரம்பிக்கிறாய்.
உன்னுடைய ஆயிரம் இதழ் கொண்ட தாமரை விரிவதுதான் பேரானந்தம். அது உன் உள்ளார்ந்த இயல்பு.
உன்னைச் சுற்றிலும் மலரும் கண்ணுக்குத் தெரியாத மலர்கள் அனைத்தையும் சேகரி.
உன்னுடைய உடல் உனது வேர், உனது தன்னுணர்வு உனது மலர்ச்சி.
இறப்பு எங்கிருந்தோ வருவதல்ல, அது உன்னுள் வளர்வது. அது உனது மலர்ச்சி.
ஞானமடைதல் என்பது உனது தன்னுணர்வு மலர்தலே.

No comments:
Post a Comment