Tuesday, 25 June 2013

ஆன்மீக வியாதியின் அறிகுறிகள்

 

1. சுத்தமே இறை வழிபாடு என்று தோன்றும்.

2. செயல்கள் செய்வதைவிட நடக்கட்டும் என்று விட்டுவிடத்   தோன்றும்.

3. அடிக்கடி சிரிப்பு வரும்.

4. இயற்கையோடும் சுற்றி இருப்பவர்களோடும் இணைப்புணர்வு     தோன்றும்.

5. அடுத்தவர்களைப் பாரட்டுதல் அதிகம் நடக்கும்.

6. இறந்த கால அனுபவங்களின் பயமுறுத்தல்களிலிருந்து    செயல்படாமல்,               இயல்பாகவும் நடப்பதை ஏற்றும் செயல்படத்    தோன்றும்.

7. இந்தக் கணத்தை அனுபவிக்கும் ஆற்றல் அதிகமாகும்.

8. கவலைப்படும் சக்தி குறைந்துபோகும்.

9. தகராறு செய்யும் சக்தி குறைந்துபோகும்.

10. மற்றவர்களை எடைபோடுவது வீண்வேலையாகத் தோன்றும்.

11. தன்னை எடைபோட்டுக் கொண்டேயிருப்பதிலும் சலிப்பு    தோன்றும்.

12. மற்றவர் செயல்களை வியாக்கியானம் செய்வதில் ஆர்வம் குறையும்.

13. இருக்கும் நம்பிக்கைகள் எல்லாம் அழிய ஆரம்பிக்கும். புதிய   நம்பிக்கை              கொள்ளவும் முடியாது.

14. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு தோன்ற ஆரம்பிக்கும்.

 --------------------------------------------------------------------------------------------
 --------------------------------------------------------------------------------------------


நீங்கள் மனத்திலிருந்து இதயத்தை நோக்கிச் சாயுங்கள். அதுவே முதல் மாற்றம். குறைவாக எண்ணுங்கள், அதிகம் உணருங்கள். அறிவுபூர்வமாக இருப்பதைக் குறையுங்கள், உள்ளுணர்வை அதிகப்படுத்துங்கள். எண்ணிக் கொள்வது மிகப்பெரிய ஏமாற்று வேலை, அது நீங்கள் மாபெரும் காரியங்களைச் செய்வதாக உணரச் செய்யும். ஆனால் உண்மையில் நீங்கள் ஆகாயக் கோட்டைகள்தான் கட்டுவீர்கள். எண்ணங்கள் வெறும் ஆகாயக் கோட்டைகள் அல்லாமல் வேறொன்றும் இல்லை.

அன்புப் படிக்கட்டு---



அன்புப் படிக்கட்டின்……………….

அடித்தட்டு காதல் – உடலின் வேகம்

அடுத்ததட்டு பாசம் – மனதின் பிடிப்பு

அதற்கடுத்தது நட்பு – பகுத்தறிவின் துணை

அதற்கு மேலே இரக்கம் – இதயத்தின் துடிப்பு

இன்னும் ஒருபடி மேலே தாய்மை – பலன் கருதா அன்பு

அதற்கும் மேல்படி கருணை – உணர்வோடு கூடிய அன்பு

இந்தப் படிகலேறி அடைகின்ற இடம்………

அருள் – உயிரின் இயல்பாய் ஒளிவிடும் அன்பு!

                               ஓஷோ


Thursday, 13 June 2013

மலர்தல்.............ஓஷோ

உனக்குள் மலர்கள் விரிந்து மணம் பரப்புவதை பார்த்த நாளில் இருந்துதான் ஆன்மீகம் என்ற ஒன்று இருப்பதை நீ அறிந்துகொள்கிறாய். மேலும் அது ஒரு இலக்கு அல்ல. மரங்கள் எந்த இலக்கை நோக்கியும் வளர்வதில்லை. மலர்ந்து மணம் பரப்புவதன் மூலம் இயற்கையோடு முழுமையாக கரைந்து கலந்து விடக் கூடிய அவற்றின் உள்ளே உள்ளார்ந்து மறைந்து உள்ள சக்தியை வெளிக் கொண்டு வரவே அவை வளர்கின்றன. பிரபஞ்சத்திற்கு எந்த இலக்கும் இல்லை. அது வெறுமனே மலர்ந்து மணம் பரப்புகிறது.

நீ உனது பொறுப்பை புரிந்து கொண்ட வினாடியில் நீ மலர ஆரம்பிக்கிறாய்.

உன்னுடைய ஆயிரம் இதழ் கொண்ட தாமரை விரிவதுதான் பேரானந்தம். அது உன் உள்ளார்ந்த இயல்பு.

உன்னைச் சுற்றிலும் மலரும் கண்ணுக்குத் தெரியாத மலர்கள் அனைத்தையும் சேகரி.

உன்னுடைய உடல் உனது வேர், உனது தன்னுணர்வு உனது மலர்ச்சி.

இறப்பு எங்கிருந்தோ வருவதல்ல, அது உன்னுள் வளர்வது. அது உனது மலர்ச்சி.

ஞானமடைதல் என்பது உனது தன்னுணர்வு மலர்தலே.

ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இருத்தல்....ஓஷோ

ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இருத்தல் என்பது மனமின்றி இருப்பது. எந்த எண்ணங்களும் இல்லாமல் வெற்றிடமாக இருக்கும்போது உன்னுடைய தன்னுணர்வு எதையும் பிடித்துக் கொள்ளாமல் இருக்கும்போது உனது கண்ணாடி பிரதிபலிக்க எதுவுமின்றி இருக்கும்போது இருப்பதுதான் ஏற்றுக் கொள்ளும் தன்மை. ஏற்றுக் கொள்ளும் தன்மை தெய்வீகத்திற்கான வாசல். மனதை விட்டு விட்டு இருத்தலாக இரு

நான் ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இரு என்று கூறும்போது திரும்பவும் ஒரு குழந்தை போல மாறி விடு என்றுதான் கூறுகிறேன்.


எங்கே மௌனமும் விழிப்புணர்வும் சந்திக்கிறதோ அங்கே ஏற்றுக் கொள்ளும் தன்மை இருக்கிறது.

ஏற்றுக் கொள்ளும் தன்மை என்பது மிக முக்கியமான ஆன்மீக குணமாகும்.

அமைதியின் இருப்பு நிலையே ஏற்றுக் கொள்ளும் தன்மையாகும்.